பால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பால் வியாபாரியான கொம்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கொம்பையா அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் இசக்கியம்மாள் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கொம்பையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]
