பேருந்துக்கு அடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் படுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுபாலப்பட்டியில் இருந்து சங்கராபுரம் வழியாக டவுன் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகே வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு நபர் திடீரென பேருந்தின் முன்பு உருண்டு சென்று பேருந்துக்கு அடியில் படுத்துக்கொண்டதை பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார். இதனை அடுத்து பேருந்து ஓட்டுநரும் பயணிகளும் அந்த நபரை வெளியே வருமாறு […]
