ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தின்போது பந்தை எடுத்து தரும் சிறுமையை தாக்கியதால் நடால் அவரிடம் மன்னிப்பு கேட்டார். நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், அர்ஜென்டினாவின் ஃபெட்ரிகோ டெல்போனிஸுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தனது […]
