மன உளைச்சலில் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் தெருவில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணத்தால் கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு வளர்மதி சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெகதீசன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். […]
