பாஜகவின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் தொடர்பான வாக்குறுதிகளுக்கு அம்மாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 11 தேதி தொடக்கி 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை […]
