வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவையே. இதில் வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும்.இதனால் ரத்த ஓட்டம் சீராக செல்லும். உள்மூலம், வெளிமூலப் புண்களுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். மலச்சிக்கலைப் போக்கும், சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றம் போன்றவைகளை நிவராணமாக்கும் தன்மையை கொண்டது வாழைப்பூ. வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ ரசம் செய்து […]
