உளுந்தூர்பேட்டை அருகே கால்நடை இடைத்தரகர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பிள்ளையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கால்நடை இடைத்தரகர்களை நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வேலையில் ஈடுபட்டுவருகிறார். இவருக்கும் கால்நடை இடைத்தரகரான அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் கால்நடை வியாபாரங்கள் செய்வதில் முன்விரோதம் இருந்துவந்தது. தெருவில் சென்றபோது வெங்கடேசனுக்கும் சிலம்பரசனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், சிலம்பரசனை […]
