மோட்டார் சைக்கிள்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும்போது திடீரென தாக்கிய மின்சாரத்தால் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வடக்கு வாசல் கங்கா நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் மெக்கானிக் ஷாப் ஒன்றில் இருசக்கர வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும் போது தரையில் கிடந்துள்ள சேதமடைந்த மின் ஒயரில் மிதித்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. […]
