மதுபோதையில் பள்ளத்தில் தவறி விழுந்து மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முழங்குழி தூணுமூட்டுகுளம் பகுதியில் மெக்கானிக்கான சுனில்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜி(24) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது போதையில் சுனில் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி அருகில் இருந்த ஒரு சிறிய பள்ளத்தில் சுனில் தலை குப்புற விழுந்ததால் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த […]
