MBBS முதலாமாண்டு வகுப்புகள் பிப்ரவரி 14 முதல் தொடங்குவதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 7.5% இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு வகுப்புகளை நடத்த வேண்டும். ஆள்மாறாட்டத்தை தவிர்க்க மாணவர்களின் கைரேகைகளை கண்டிப்பாக பெற வேண்டும். மார்ச் 31-ஆம் தேதிக்குள் கைரேகைகளை வழங்காத மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிரடியாக அறிவித்துள்ளது.
