Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சரக்கு ரயிலில் கிளம்பிய “தீப்பொறி”…. ஊழியர்கள் அளித்த தகவல்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!!!

மயிலாடுதுறையில் இருந்து சரக்கு ரயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் அருகே சென்றபோது ரயில் சக்கரத்தில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு புகை கிளம்பியதை பார்த்த ரயில்வே ஊழியர்கள் இன்ஜின் ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து ரயில்வே ஊழியர்கள் பார்வையிட்ட போது பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக தீப்பொறி கிளம்பியது தெரியவந்தது. இதனால் ஊழியர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்வளவு நடந்திருச்சு…. இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!

கொரோனா பாதுகாப்பு சுகாதார பணிகளை மேற்கொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாசல் பகுதியின் ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளா தமிழ்ச்செல்வன். இவர் கொரோனா காலம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து அலுவலகத்திற்கு வருவதில்லை எனவும் எந்தவித பாதுகாப்பு சுகாதார பணிகளும் செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் திருமுல்லைவாசல் ஊராட்சியில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை ஏற்பட்டும் இதுவரை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

புதிய சிகிச்சை மையம் வந்தாச்சு…. மொத்தம் 100 படுக்கை வசதிகள்…. தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் திறக்கப்பட்டது….!!

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் 100 படுக்கை வசதி கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் படுக்கைகளுடன் கூடிய புதிய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மக்களின் கனவு நனவாகியது…! தமிழகத்தின் 38வது மாவட்டம்…! உதயமானது மயிலாடுதுறை…!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தனியாகப் பிரித்து புதிய மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் தமிழ்நாட்டில் முதலில் 32 மாவட்டங்கள் இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து தென்காசி மாவட்டம் உருவானது. அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் தனியாக பிரிந்து ஆக மொத்தம் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இப்புதிய […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாடி விட்டு மாடி தாவ முயற்சி…. தவறி விழுந்த திருடன் பலி!!

மயிலாடுதுறையில் திருடன் ஒருவன்  ஒருவீட்டின் மாடியில் இருந்து, மற்றொரு வீட்டின் மாடிக்கு தாவிக் குதிக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்தான்.  நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இருக்கும்  சித்தர்காடு, பனந்தோப்பு தெருவை சேர்ந்த ‘ஸ்டாண்டு மணி’ என்கிற மணிகண்டன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், மணிகண்டன் தனது திருட்டு வேலையை மீண்டும்  காட்டுவதற்கு காமராஜர் தெருவில் உள்ள ராஜலெட்சுமி என்பவரது வீட்டின்  மொட்டை மாடியில் இருந்து அருகிலுள்ள மொட்டை மாடிக்கு  குதித்துள்ளார். சுமார்  15 அடி […]

Categories

Tech |