கவியரசன் கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை எழுதியுள்ளார். அவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் சுமைதாங்கி நிற்கும் பாடல் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்கின்ற பாடல் தான். இந்தப் பாடலோடு தொடர்புடைய உண்மை நிகழ்வுகள் இந்த செய்தித் தொகுப்பில் பகிரபட்டுள்ளது. கண்ணதாசன் சென்னைக்கு வரும் பொழுது அவருடைய வயது பதினாறு இருக்கும். காரைக்குடியில் இருந்து சென்னைக்கு கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வந்திருக்கிறார். வருடம் 1943 சென்னையில் எக்மோரில் வந்து இறங்குகிறார் […]
