குண்டும் குழியுமாக இருக்கும் தார் சாலையை சீரமைத்து தருமாறு பெண்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள எரங்காடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் எரங்காடு பிரிவு சாலையில் இருந்து நடுநிலைப்பள்ளி வரை 1 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை தற்போது பழுதடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் தார் சாலையை சீரமைத்து தருமாறு கிராம மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளார். […]
