மன உளைச்சலினால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாத்தூர் கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டா எண் மாறி இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட துறைக்கு சென்று திருத்தி தருமாறு முறையிட்டுள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தாமோதரன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த […]
