Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 239 நபர்கள்…. தீவிர கண்காணிப்பு…. காவல்துறை சூப்பிரண்டு எச்சரிக்கை….!!

குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 144 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்பின் 58 நபர்களை நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வருடம் மொத்தமாக 36 நபர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. எனவே மொத்தமாக 239 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வரலட்சுமி நோன்பு…. கோவில்களில் சிறப்பு வழிபாடு…. ஆர்வமுடன் கலந்து கொண்ட பக்தர்கள்….!!

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அனைத்து அம்பாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்பாள் கோவில்களில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சீரும் சிறப்புமாக வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. அதன்பின் அம்மன் ஆதி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளார். இதனையடுத்து ஆதி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இந்தப் பூஜையில் விரதம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நிகழ்ச்சிக்கு சென்ற மருத்துவர்…. கைவரிசை காட்டிய மர்மநபர்கள்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

மருத்துவர் ஒருவரின் வீட்டில் மர்ம நபர்கள் பணம், வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோமனாகல்லி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்து விற்பனை…. 12 பேர் கைது…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 12 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிகமான விலைக்கு விற்பனை செய்த 12 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காலாவதியான மாத்திரைகள்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!

காலாவதியான மாத்திரைகளை 13 வயது சிறுமிக்கு மருத்துவர்கள் வழங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு இம்மாவட்டத்தை சுற்றி இருக்கும் 15-க்கும் மேலான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்களுக்காகவும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்வதற்காக வந்து செல்கின்றனர். இதில் அவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தனியாக சிக்கிய கார் ஓட்டுநர்…. குழாயால் தாக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கார் ஓட்டுனரை இரும்பு குழாயால் தாக்கி கொலை மிரட்டல் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் வசந்த ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதனால் வசந்த ராஜ் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு வந்த ரமேஷ் அவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை இரும்பு குழாயால் தாக்கி பின் கொலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட பெண்…. சாவில் சந்தேகப்படும் தந்தை…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்….!!

திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலு என்பவரை பதினோர மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற விவசாயி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

விவசாயி ஒருவரின் வீட்டில் 20 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இரண்டு பேரும் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் இருக்கும் தங்களுடைய வாயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது தமிழரசியை பாம்பு கடித்து உள்ளது. இதனால் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 15 டன்…. தப்பியோடிய ஓட்டுனர்…. தேடும் பணியில் காவல்துறையினர்…‌.!!

15 டன் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயற்சி செய்த லாரி ஓட்டுநரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் ரேஷன் கடையின் அரிசிகளை கடத்துவதை தடுக்க பல நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மூலமாக ரேஷன் கடையின் அரிசிகளை கடத்துவதாக குடிமை பொருள் தாசில்தார் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் வாசுதேவன் தலைமையில் அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறையினருடன் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பசுமையாக மாறப்போகும் கிராமம்…. அதிகாரிகளுக்கு அறிவுரை…. ஆய்வு செய்த இயக்குனர்….!!

கிராமத்தை பசுமையாக மாற்றுவதற்கு எல்லா வசதிகளையும் செய்து தருவது சம்பந்தமாக முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் ஊராட்சியத்தை பசுமை கிராமமாக மாற்றுவதற்கு அங்கே உள்ள அனைத்து பகுதிகளையும் முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் அந்த ஆய்வின் போது கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தி தரவும் சாலை மற்றும் குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் பெற்ற […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடூரம்…. வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்…. கைது செய்த மகளிர் காவல்துறையினர்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மணம்பாக்கம் அண்ணாநகர் பகுதியில் சிங்கார தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது உறவு கார 12 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தச் சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்… கோஷம் எழுப்பிய தொழிலாளர்கள்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

மின்வாரிய தொழிலாளர்கள் பொறியாளர் அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் லெனின் மகேந்திரன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட துணைத்தலைவர் விஜயன் மற்றும் மாநில நிர்வாகிகள் ஜீவா, நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளனர். பிறகு முத்தரப்பு ஒப்பந்தத்தின் படி ஒப்பந்த தொழிலாளர்களை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் உயர்வு…. தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்…. கட்சியாளர்களின் செயல்….!!

டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் வாழ்வுரிமை கட்சி சார்பாக டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தொலைபேசி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளரான சரவணன் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்த மாநில நிர்வாகி டாக்டர் முனிரத்தினம், மகளிரணி, நிர்வாகிகள் மதுபாலா, மணிலா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சரவணன் மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் தவமணி ஆகியோர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காயமடைந்த 2 பேர்…. சாலையில் நடந்த கோர சம்பவம்…. அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள்….!!

சாலையில் சென்று கொண்டிருந்த சர்க்கரை மூட்டை லாரி ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக கர்நாடக மாநிலத்திலிருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை ‌ மகேஷ் என்ற ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் மாற்று ஓட்டுநராக சிவசங்கர் என்பவர் வந்துள்ளார். இதனை அடுத்து இரட்டைப் பாலம் அருகில் வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. இதில் 2 ஓட்டுனர்களும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பல குற்ற சம்பவங்கள்…. வசமாக சிக்கிக் கொண்ட ரவுடி…. கைது செய்த காவல்துறையினர்….!!

பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குணா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் பெண் ஒருவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவை வாங்கி கொண்டு ஆட்களை விட்டு உரிமையாளரை அங்கிருந்து விரட்டி உள்ளார். இந்நிலையில் குணா என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் படி குணா, அவருடன் இருக்கின்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த படப்பை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. தேடும் பணியில் காவல்துறையினர்….!!

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூலசமுத்திரம் பகுதியில் பத்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பத்மா அவரின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் பத்மாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். அப்போது பயத்தில் பத்மா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்கள் வாக்களிக்க கூடாது…. திடீரென வெளிவந்த தகவல்…. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்….!!

தங்களையும் வாக்களிக்க அனுமதிக்குமாறு ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சிக்கம்பட்டி மற்றும் குன்றத்தூர் போன்ற கிராமங்களில் இருக்கும் 6 வார்டுகளில் வசிக்கின்ற மக்கள் வாக்களிக்க இருந்துள்ளனர். ஆனால் தற்போது 4 வார்டுகளில் வசிப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் எனவும் மீதமுள்ள 2 வார்டுகளில் வசிக்கும் மக்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை…. பாலித்தீன் பை வழங்கியதால் கடைக்கு சீல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சாராயம் விற்பனை செய்வதற்காக பாலித்தீன் பைகளை வழங்கிய மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 5 பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சாராய விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட வியாபாரிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் சாராயத்தை பாக்கெட்டுகளில் வைத்து விற்பதற்கு தேவைப்படுகின்ற பாலித்தீன் பைகளை மளிகை கடையில் வாங்கியதாக கூறியுள்ளனர். அதன் பின் கடைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக அமைக்கப்படும் சந்தை…. பொதுமக்களின் கோரிக்கை…. ஆய்வு செய்த கலெக்டர்….!!

மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குருகாவூர் சாலையில் இருக்கும் உழவர் உற்பத்தியாளர் வேளாண் வணிக மையத்தை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது அவர்களிடம் குழுவில் எத்தனை விவசாயிகள் உள்ளனர் என கேட்டுள்ளார். அதன்பின் குழுவில் இல்லாத விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், எந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது எனவும், வேறு ஏதாவது பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

100 நாள் வேலை திட்டம்…. ஆய்வு செய்த அதிகாரிகள்…. கலெக்டர் உத்தரவு….!!

ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த இருளர் இன மக்களான 7௦ நபர்களுக்கும் அதிகமானவர்களுக்கு 100 நாள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் ஊராட்சி பகுதியில் இருக்கும் இந்திரா நகரில் 70-க்கும் அதிகமான இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வேலைவாய்ப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் வறுமையில் வாடி வருகின்றனர். அதனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கலெக்டரிடம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சந்தைக்கு மறுப்பு…. வெளியேற சொன்ன அதிகாரிகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்….!!

வார சந்தைக்கு அனுமதி வழங்கக் கோரி வியாபாரிகள் காய்கறிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை நாட்களில் வாரசந்தை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்த வார சந்தைக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தற்போது வார சந்தை போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று வாரசந்தை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கணவரின் சாவில் மர்மம்…. உடலை வாங்க மறுத்த மனைவி…. தர்மபுரியில் பரபரப்பு….!!

கணவனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்களுடன் பெண் ஒருவர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெருப்பூர் பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி உள்ளனர். இந்நிலையில் கணவனுக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அடுத்து ஆசைத்தம்பி திடீரென இறந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சுவரில் லாரி மோதி விபத்து…. ஓட்டுநர் காயம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

கணவாய் வழியாக டைல்ஸ் ஏற்றி வந்த லாரி சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக பெங்களூருவிலிருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை ஓட்டுனர் மோகன் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கணவாய் பகுதியில் லாரி வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பு சுவரின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் காயமடைந்துள்ளார். இது பற்றி தகவலறிந்த சுங்கவாடி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமணமான புதுப்பெண்…. எடுத்த விபரீத முடிவு…. உதவி கலெக்டர் தீவிர விசாரணை….!!

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேலனூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 3 மாதம் ஆகியுள்ளது. இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் மீனா குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று மீனாவின் உடலை மீட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற தொழிலாளி…. மர்ம நபர்களின் கைவரிசை…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ஊதுபத்தி தொழிலாளி வீட்டில் உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துரைசாமி ரோடு பகுதியில் நடராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊதுபத்தி தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் தொழில் சம்பந்தமாக வெளியே சென்றுள்ளார். இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள், 1, 16, 500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 12 பவுன் தங்க நகை ஆகியவற்றை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தேங்கி நிற்கும் மழை நீர்…. சிரமத்தில் இருக்கும் பொதுமக்கள்…. அதிகாரிகளிடம் கோரிக்கை….!!

சுடுகாட்டில் இருக்கும் மழைநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஏலகிரி பகுதியில் சுடுகாடு அமைந்திருக்கின்றது. இதில் புது ஓட்டல் தெரு, சந்தை, கோட்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களை ஏலகிரி சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த வாரம் ஜோலார்பேட்டை மற்றும் ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதனை அடுத்து நீலகிரி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 2 கோடியே 57 3/4 லட்சம்…. உழவர் சந்தை மேம்படுத்துதல்…. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

உழவர் சந்தையை மேம்படுத்த 2 கோடியே 57  3/4லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றி உள்ள 3 இடங்களில் உழவர் சந்தை அமைந்திருக்கின்றது. இதில் உழவர் சந்தையில் மொத்தமாக 2800 விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றன. இந்நிலையில் சராசரியாக 45 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நாள்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக 60 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்து வருகின்றது. இதனையடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்பட்டும் கட்டிடம்…. ரோட்டில் வரவேற்பு…. ஆய்வு செய்த தலைவர்….!!

புதிதாக கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா திறக்கப்பட உள்ளதாக மாநில தலைவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அலுவலகம் வாணியம்பாடிய பகுதியில்  தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அலுவலகம் கட்டுகின்ற பணியை மாநில தலைவர் அண்ணாமலை திடீரென ஆய்வு செய்துள்ளார். இதில் முன்னதாகவே வருகை தந்த மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாஜக சார்பாக பைபாஸ் ரோட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆய்வு மேற்கொள்ள வந்தவரிடம் கட்சியினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி தலைமை ஆசிரியர்…. நடந்த கோர சம்பவம்…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஈச்சங்காடு பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாணியம்பாடி பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவியும் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அவரின் சகோதரி வீட்டில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு அடையாள அட்டை…. தீவிரமாக நடைபெறும் கள பணி…. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

வேளாண் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் கலெக்டர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் தரமான காய்கறி விற்பனைகள் செய்யப்படுகிறதா என, காய்கறிகளின் விலை நிலவரம் குறித்தும், உழவர் சந்தைக்கு நாள்தோறும் எத்தனை விவசாயிகள் காய்கறிகள் எடுத்து வருகின்றார்களா என ஆய்வு செய்துள்ளார். இதில் புதிதாக காய்கறி விற்பனை செய்வதற்கு 40 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட தோட்டக்கலை, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 50 மூட்டைகள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

50 மணல் மூட்டைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்று கரையில் இருந்து மணலை கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீ நாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைவாக சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியிலிருந்து மணலை கடத்தி வந்து மூட்டைகளாக கட்டி பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொள்முதல் செய்யாத காரணத்தால்…. போராட்டத்தில் ஈடுபட்ட உற்பத்தியாளர்கள்…. பரபரப்பில் கள்ளக்குறிச்சி….!!

பால்களை கொள்முதல் செய்யாததால் உற்பத்தியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தீர்த்தாபுரம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தின் மூலமாக அப்பகுதியில் இருக்கும் 280 உற்பத்தியாளர்களிடமிருந்து நாள்தோறும் காலை நேரத்தில் 2,000 லிட்டர் மற்றும் மாலை நேரத்தில் 1,400 லிட்டர் பால்களை கொள்முதல் செய்து வந்துள்ளனர். இதை தினமும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில் 15 நாட்களில் ஒரு நாள் மட்டும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாராயம், மது விற்பனை…. வசமாக சிக்கிய நபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த மூன்று அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொண்டனந்தல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் சரவணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாராயம் விற்பனை செய்வதற்காக வைத்திருக்கின்றனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சரவணன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆற்று மணல் கடத்தல்…. பொதுமக்கள் மனு…. ஆய்வு செய்த கலெக்டர்….!!

ஆற்று மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் தங்களின் கிராமத்தின் அருகில் இருக்கும் மணிமுத்தாறு அணை கட்டி கீழ்ப்புறத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலர் டிராக்டர் மூலம் மணல் கடத்தி சென்று விற்பனை செய்வதாக கூறியுள்ளனர். இன்னிலையில் ஆற்றிலிருந்து மணல் எடுத்து அதே பகுதியில் இருக்கும் மாரியம்மன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனைவிக்கு தெரிந்த உண்மை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

குடும்பத்தகராறு காரணத்தால் கட்டிட மேஸ்திரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் பகுதியில் சக்தி குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் நித்யா என்ற பெண்ணுக்கும் சக்தி குமாருக்கு சில மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து நித்யாவிற்கு சக்தி குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் கண்டெடுப்பு…. சாக்குப் பையில் இருந்த நாட்டுத்துப்பாக்கி…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்….!!

வனப்பகுதியில் ஆதரவற்று கிடந்த நாட்டு துப்பாக்கியை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் எதிரில் இருக்கும் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கி ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் பாறையின் இடுக்கில் சாக்குப்பையில் நாட்டுத் துப்பாக்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் நாட்டு துப்பாக்கியை மீட்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தலைமையாசிரியர்…. மர்ம நபரின் கைவரிசை…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்….!!

அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் மர்ம நபர் ஒருவர் 11 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுயுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் டி.காணிகரஅள்ளி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாலை நேரத்தில் அவர் வீட்டின் அருகில் நடந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் 11 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 40 கிலோ…. முதலாளியிடம் கைவரிசை காட்டிய ஓட்டுனர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

2 கார்களை திருடிச் சென்று அதன்மூலம் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் தனிப்படை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்த போது அவர் ஜகன் குமார் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொடியேற்ற விடாததால்…. தர்ணாவில் ஈடுபட்ட செயலாளர்…. பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர்….!!

கூட்டுறவு சங்கத்தில் மகளிர் அணி செயலாளர் சாந்தியை கொடியேற்ற விடாததால் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் முன்பாக சுதந்திர தின விழாவிற்கு ஜோலார்பேட்டை அருகில் இருக்கும் பால்தான் குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் அ.தி.மு.க ஒன்றிய மகளிர் அணி செயலாளரான சாந்தி தேசியக்கொடியை ஏற்ற ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க-வை சார்ந்த சிலர் சாந்தியை தேசியக்கொடியை ஏற்ற விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர தின நாளில்…. மொத்தம் 8 கோடியே 12 லட்சம்…. அலை மோதிய மது பிரியர்கள்….!!

மூன்று மாவட்டங்களில் சுதந்திர தினம் 8 கோடியே 12 லட்சத்திற்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியிருப்பதாக மதுபான கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 75-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இருக்கும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் மதுபான கடைகள் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதில் மாலை முதல் இரவு நேரம் வரை ஏராளமான மது பிரியர்கள் கடைகளின் முன்பாக குவிந்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்த துக்கத்தால்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி குடிப்பழக்கத்தை விட சொன்னதால் மன உளைச்சலில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புக்கிரவாரி  பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கமுடைய சின்னதுரை மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனால் கணவனிடம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாராய விற்பனை…. பாலித்தீன் பை கொடுத்த கடைக்கு சீல்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

சாராயம் விற்பனை செய்ய பாலித்தீன் பை கொடுத்து உதவி செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியில் சாராய விற்பனை செய்வதாக காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதிக்கு சென்று சாராய வேட்டையில் ஈடுபட்ட போது சாராயம் விற்பனை செய்த சீனிவாசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் கூலிக்காகத் தான் சாராயம் விற்பனை செய்வதாகவும், பெரியசாமி என்பவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சுதந்திர தின விழா…. மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி…. நலத்திட்ட உதவி செய்யும் கலெக்டர்….!!

சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 28 லட்சம் மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் சார்பாக 75-வது சுதந்திர தின விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் முன்னிலை வகித்துயுள்ளார். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின் தேசியக்கொடியின் மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட கலெக்டர் உலகத்தின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான வாலிபர்…. ஆத்திரத்தில் செய்த காரியம்…. பரபரப்பில் காஞ்சிபுரம்….!!

குடும்ப பிரச்சனை காரணத்தினால் கணவன் மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவகிரி காமராஜர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அணு என்பவரை காதலித்து ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது அணுவுக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகன் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்ற லாரி…. சிகிச்சையில் இருக்கும் ஓட்டுனர்கள்…. அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள்….!!

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென செயல்பாட்டை இழந்ததால் ரோட்டில் கவிழ்ந்து 2 ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக பெங்களூரில் இருந்து பெயிண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை ஓட்டுநரான துறை கண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவருடன் மாற்று ஓட்டுனராக பூமாலை என்பவர் வந்துள்ளார். அப்போது கனவாய் வழியில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குளிக்கப்போன இடத்தில்…. வாலிபருக்கு நடந்த கோர சம்பவம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

தொழிலாளி ஒருவர் நண்பருடன் குளிக்க சென்ற இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தறி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பருடன் தொப்பையாறு அணைக்கு குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது சீனிவாசன் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இது பற்றி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் படி விரைவாக வந்த தீயணைப்பு துறையினர் சீனிவாசனை தேடும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வழிபாடு நடத்த தடை…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்…. மறுப்பு தெரிவித்த வனத்துறையினர்….!!

சங்கிலி முனியப்பன் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி வழங்காததால் வனத்துறை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம்புதூர் ஊராட்சி ஒபிலி ராயன் வனப்பகுதியில் சங்கிலி முனியப்பன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இக்கோவிலில் 10-க்கும் அதிகமான கிராம மக்கள் கோழி மற்றும் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் இருக்கும் சாமியை வழிபடகூடாது என மறுத்து கிராம மக்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து பொது மக்களுக்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நோய் காரணத்தினால்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

சர்க்கரை நோய்க்கு பயந்து பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சந்தப்பேட்டை கணபதி நகர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுகந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுகந்தா கடந்த 6 மாத காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் தனியார் மருத்துவ மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை அடுத்து சர்க்கரை நோய் வந்தால் விரல்களை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குழாய்களை திருட முயன்ற வாலிபர்…. மடக்கிப் பிடித்த ஊழியர்கள்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

போர்வெல் எந்திர லாரியிலிருந்த 2 குழாய்களைப் திருட முயற்சி செய்த வாலிபரை நிறுவனத்தின் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுரோடு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் போர்வெல் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் பணிபுரியும் திவாகர் என்பவருடன் சேர்ந்து கம்பெனி அலுவலகத்தின் அருகில் இருக்கும் வராண்டாவில் துவங்கியுள்ளனர். அப்போது அலுவலகத்தின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த போர்வெல் இந்திரன் லாரியில் இருந்த துளை போட […]

Categories

Tech |