மாட்டு வண்டி மற்றும் குதிரை பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்டுகளித்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மணத்தட்டை பகுதியில் வசிக்கும் மக்கள் சார்பாக மாட்டு வண்டி மற்றும் குதிரை பந்தயம் நடைபெற்றுள்ளது. இந்தப் பந்தயத்தில் தேன்சிட்டு எனப்படும் சிறிய மாடு, ஒற்றை மற்றும் இரட்டை மாடு, சிறிய குதிரை, பெரிய குதிரை எனத் தனித்தனியாக பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. இவை குளித்தலை-மணப்பாறை சாலையில் தொடங்கி வெற்றி இலக்கை நோக்கி குதிரைகள் மற்றும் மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதனையடுத்து […]
