550 மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆசனூர் பகுதியில் காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மூன்று மூட்டைகளில் 550 வெளிமாநில மது பாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் வந்த நபர்களை விசாரணை செய்ததில் […]
