மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட மூதாட்டி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகின்ற காரணத்தினால் 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 12-ஆம் தேதியும் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குத்தம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிவேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் 411 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]
