அமெரிக்க தாக்குதலுக்கு பயந்து போய் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். பாகிஸ்தானில் பாஹாவால்புர் சிறையில் மசூத் அசார் அடைக்கப்பட்டிருந்தான். ஆனால் தற்போது அவன் திடீரென ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். காரணம், அமெரிக்கா அவனுக்கு குறி வைத்தாக சொல்லப்படுகிறது. ஆம் , அமெரிக்காவுக்கும், தாலிபான் தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதை கிண்டலடித்துப் பேசினான் மசூத் அசார். அவன், ஓநாயின் வால் அறுந்து ஓடி விட்டது […]
