பீகார் மத்திய சிறையில் சுமார் 50 கைதிகள் இரவு-பகலாக முகக்கவசங்களை மும்முரமாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரசில் இருந்து மக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக்கொள்ள பல்வேறு தடுப்பு முறைகளை கையாள வேண்டும் என அரசும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி இருக்கின்றன. இதில் முக்கியமாக அனைவருமே மாஸ்க் அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் முகக்கவசத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. முகக்கவசம் கிடைக்கும் பல பகுதிகளில் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளது. […]
