அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களின் வார்டில் நாய் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் இங்கு 100-க்கும் அதிகமான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கின்றது. இதில் அரசு மருத்துவமனையில் குப்பை கழிவுகளை அகற்றுவது இல்லை எனவும், கால்வாய்களை தூர்வாரவில்லை என்றும், இரவு நேரங்களில் மின் விளக்குகளை போடுவதில்லை என்று […]
