கார் பந்தயத்தின்போது ஓடுபாதையில் இருந்து தடம் மாறிய கார், பறந்து சென்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. உலக சாம்பியனான ஓட் டனாக் (Ott Tanak) மற்றும் அவரது கோ-டிரைவர் மார்ட்டின் ஜார்வொஜா (Martin Jarveoja) இருவரும் மான்டி கார்லோவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தங்களது ஹூண்டாய் காரில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கினர். அதிவேகமாக சென்ற கார், பனிபடர்ந்த சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் பறந்து மரத்தில் […]
