ஒரு திருமண விழாவில் வித்தியாசமாக செல்போன் செயலி மூலம் மொய் பணம் வசூலித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை மாவட்டத்தில் மொய் எழுதும் பழக்கமானது மிகவும் விசேஷமான ஒன்றாகும். திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதுகுத்து போன்ற அனைத்து குடும்ப விழாக்களிலும் மொய் பணம் வசூலித்து அதனை நோட்டு போட்டு எழுதி, அவர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சென்று அந்த பணத்தை திரும்ப எழுதுவர். இந்நிலையில் மதுரை போன்ற மாவட்டங்களில் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பணத்தை நோட்டுப் போட்டு […]
