போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர், ஜூனியர் மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இளம் வீராங்களை மனு பக்கர் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 63ஆவது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக போபாலில் நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் ஜூனியர் மகளிர் தனிநபருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட இளம் நட்சத்திர வீராங்கனை மனு பக்கர் 241.5 புள்ளிகளை எடுத்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். […]
