பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்திச் சென்று காருக்குள்ளேயே தாலி கட்டிய இளைஞரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த அரசிக்கெரே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அப்பகுதியிலுள்ள பால்பண்ணை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த இளைஞர்கள், அப்பெண்ணைத் தூக்கி காருக்குள் அடைத்து கடத்திச் சென்றனர். சினிமா பட பாணியில், நொடிப்பொழுதில் நடந்த இச்சம்பவத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் செய்தவறியாது திகைத்துநின்றனர். இது குறித்து கேள்விப்பட்ட பெண்ணின் பெற்றோர், […]
