போலீசாரின் நடவடிக்கை தாமதமாக இருப்பதாக கூறி வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அமரம்பேடு பகுதியில் பவித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அமரம்பேடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றபோது, அதே பகுதியில் வசித்து வரும் பாலாஜி என்பவர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் பாலாஜி மூன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்ததால், பவித்ரா தான் ஒரு கார்டுக்கு மட்டும் […]
