மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விடுவேன் என கணவர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தொண்டமாந்துறை பகுதியில் கர்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டபோது, கோபத்தில் கர்ணன் தனது வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து விஜயாவை சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். […]
