ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர ஆயுதப்படை பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் 2-ஆம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சாதிக் பாஷா தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர்களான நிரஞ்சன், நெப்போலியன் ஆகியோருடன் கீழ்ப்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக சாதிக் பாஷாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக […]
