மண்சரிவால் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்ததில் வாகன ஓட்டிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சுற்றுலாத்தளம் திறக்கப்படாத நிலையில் தற்போது திறக்கப்பட்டு இருப்பதினால் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது கனமழை பெய்த காரணத்தினால் கொண்டை ஊசி வளைவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டு பெரிய ஆழமான ராட்சச பாறை சாலையோரத்தில் மரங்களுடன் சாய்ந்து விழுந்துள்ளது. அப்போது வழியாக வாகனங்கள் எதுவும் […]
