குடிபோதையில் தகராறு செய்ததால் கணவனை மனைவி கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் காளிமுத்து என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிமுத்து தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து குடிபோதையில் தனது மூன்று மகள்களையும் காளிமுத்து அடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து […]
