நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் பகுதியில் சரத் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரத்குமார் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்த போது திடீரென இரண்டு மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கே சென்றுள்ளது. இதனையடுத்து அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் 3 நாட்டு வெடிகுண்டுகளை சரத்குமாரின் மீது வீசியுள்ளனர். மேலும் அவர்கள் 6 பேரும் இணைந்து சரத்குமாரை அரிவாளால் சரமாரியாக […]
