காதலித்த பெண் பேசாமல் இருந்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் விஜயராஜ் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவரும் ஏர்வாடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் விஜயராஜனின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கண்டித்துள்ளனர். இதானால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். […]
