திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் 24 வயது இளம்பெண் படித்து வந்துள்ளார். இவரும் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் திருநாவுக்கரசு என்ற வாலிபரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் திருநாவுக்கரசரின் குடும்பத்தினருக்கு தெரியவந்த பிறகு இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி திருநாவுக்கரசர் அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து திருநாவுக்கரசரின் தாயார் நாகம்மாள் […]
