கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிச்சாவடி கீழ் குமாரமங்கலம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் கையில் இரும்பு கம்பியுடன் பள்ளிக்குள் நுழைந்த வாலிபர் வகுப்பறையிலிருந்த ஜன்னல் கண்ணாடி, ப்ரொஜெக்டர், இன்வெர்ட்டர், கணினி, குடிநீர் எந்திரம் ஆகியவற்றை அடித்து உடைத்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரை பிடிக்க முயன்ற போது இரும்பு கம்பியால் அவர் ஆசிரியர்களை தாக்க முயன்றார். இதனால் ஆசிரியர்கள் மற்றொரு வகுப்பறைக்குள் சென்று விட்டனர். ஆசிரியர்களும் மாணவர்களும் சத்தம் […]
