பிறந்தநாள் விழாவில் கேக்கை கத்தியால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மரவன்மடம் திரவியபுரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 22ஆம் தேதி தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். அப்போது மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர்களான ராஜா, அதிர்ஷ்ட லிங்கம், யுவராஜா, ஜெயகணேஷ் போன்றோருடன் இணைந்து பிறந்தநாள் கேக்கை வாள் போன்ற நீண்ட கத்தியால் வெட்டியுள்ளார். மேலும் […]
