ஆம்பன் புயலால் மேற்குவங்கத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நேற்று பிற்பகல் 3 மணிக்கு கரையைக் கடக்க தொடங்கியது. புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. இந்தப் புயலால் கொல்கத்தாவில் கடும் சூறாவளிக் […]
