குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லியிலும் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் சேதமடைந்தது. இப்போராட்டத்தில் போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். […]
