நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த புள்ளிமானுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொகனூர் காப்புக் காட்டில் இருந்து ஆண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி சாமி புரம் ஊருக்குள் நுழைந்து விட்டது. இந்நிலையில் ஊருக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் விரட்டி கடித்து குதறி உள்ளன. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நாய்களை துரத்திவிட்டு காயமடைந்த மானை மீட்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
