கிணற்றில் உள்ள தண்ணீரில் பெட்ரோல் கலந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி கேரள எல்லைப்பகுதியான பனச்சமூடு, புளியூர்சாலை என்ற பகுதியில் கோபி என்பவர் வசித்துவருகிறார். இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு இருக்கின்றது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை தான் கோபியின் குடும்பத்தினர் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரில் பெட்ரோல் வாசம் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கோபி தண்ணீரை வாளியில் எடுத்து தீ வைத்தபோது, தண்ணீரானது […]
