Categories
உலக செய்திகள்

இலங்கையின் அடுத்த அதிபர் யார் ? தேர்தல் தேதி அறிவிப்பு..!!

இலங்கையின் அடுத்த அதிபருக்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்ரிபாலா சிறிசேனா, ராஜபக்சேவைத் தோல்வியடைச் செய்து இலங்கையின் அதிபரானார். இந்நிலையில் மைத்ரிபாலா சிறிசேனா பதவிக்காலமானது நிறைவடைய இருப்பதால்  இலங்கையின் தலைமைத் தேர்தல் ஆணையரான மகிந்தா தேசபிரியா புதிய அதிபருக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இவர் தேர்தல் நடத்தும் தேதியை பற்றி அதிபர்,சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களோடு கலந்து பேசியப்  பின்னரே நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை  அதிபர்  தேர்தலானது  நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி  மாற்றுவதற்கு அதிபருக்கு கையில் தான் அதிகாரம் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. .

Categories

Tech |