மஹேந்திரா நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு உட்படும் புதிய காரின் சோதனை புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் பி.எஸ். 6 புகை விதிகள் அமலாக உள்ளது. இதனால் அனைத்து மோட்டார் நிறுவனங்களும் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் கார் மற்றும் பைக்குகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மஹிந்திரா நிறுவனம் புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் புதிய காரை உருவாக்கி உள்ளது. இந்த கார் ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலின் […]
