தனது அரசியல் சுய லாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என்று திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட (SPG) சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்தில் டி.ஆர்.பாலு […]
