நடிகர் சிம்பு தனது நண்பரும், நடிகருமான மகத் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வல்லவன், காளை உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த மகத், அஜித்தின் மங்காத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரும், சக போட்டியாளரும், நடிகையுமான யாஷிகாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த மகத்தின் காதலியும், மாடல் அழகியுமான பிராச்சி மிஸ்ரா, மகத்துடன் பிரேக்அப் […]
