மகாராஷ்டிரா தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், வொர்லி தொகுதியில் வெற்றிபெற்ற ஆதித்ய தாக்கரேவை முதலமைச்சராக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் பாஜகவிடம் வலியுறுத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்டு, 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. பாஜக சிவசேனாவுடன் தேர்தலுக்கு முன்பு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடைபெற விருக்கிறது. இருந்தபோதிலும், யாருக்கும் தனிப் […]
