Categories
தேசிய செய்திகள்

ரூ.1 மருத்துவம், ரூ 10 உணவு, 80%இடஒதுக்கீடு…. அதிரடி காட்டும் மஹா. முதல்வர்

மஹாராஷ்டிராவில் புதிதாக பொறுப்பேற்ற அரசு அதிரடி திட்டமாக 3  திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் 18_ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். அவருடைய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.இந்த சூழ்நிலையில் சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து (மகா விகாஸ் அகதி ) என்ற கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். அந்த கூட்டணி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சீராக செல்ல வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச செயல் திட்டம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

நாக்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜராக தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு சம்மன்..!!

மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனது குற்ற வழக்குகளை மறைத்ததற்காக நாக்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்தார் காவல் நிலையத்தில் இருந்து முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இல்லத்திற்குச் சம்மன் கடிதம் கொண்டு சேர்க்கப்பட்டது. அதில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர், தன் மீதுள்ள இரண்டு குற்ற வழக்குகளை மறைத்து, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியான ‘மகா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கோட்சேவை ‘தேசபக்தன்’ எனக் கூறியதால் பிரக்யாவின் பதவி பறிப்பு

நாதுராம் கோட்சே தேசபக்தன் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பிரக்யா சிங் தாக்கூரின் நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாலேகான் பகுதி ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குற்றமச்சாட்டப்பட்டவாரன சர்ச்சை எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் தற்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி பதவியைப் பறிகொடுத்துள்ளார். 2019ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற பிரக்யா சிங் தாக்கூர், அண்மையில் நாடாளுமன்ற பாதுகாப்புத் துறை நிலைக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். மகாத்மா காந்தியைக் கொன்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கூட்டணி குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்து…!

அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது குறித்து, சரியான நேரத்தில் பதில் அளிப்பதாக மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது தவறு எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்குச் சரியான நேரத்தில சரியான பதிலளிப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் பவார், ‘ நான் என்சிபியில் தான் இருக்கிறேன். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

க்ளைமேக்ஸை நெருங்கிய மகாராஷ்டிர அரசியல் களம் – 288 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு நேற்று சுமூகமான முடிவு எட்டப்பட்ட நிலையில், இன்று வெற்றிபெற்ற 288 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஒரு மாத காலமாக அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி திருப்பங்களுக்குப் பிறகு ஒரு வழியாக மகாராஷ்டிராவில் ஆட்சியமைவதற்கான சாதகமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கடும் போராட்டத்திற்குப் பின் தான் நினைத்ததை சாதித்துள்ளது சிவசேனா. சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவுக்கரம் நீட்டி, காங்கிரஸோடு கூட்டணியமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பாலமாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேவேந்திர ஃபட்னாவிஸை கலாய்த்த குமாரசாமி!

மகாராஷ்டிராவில் நடக்கும் விஷயங்களைப் பார்த்து, நான் மகிழ்ச்சி அடைய வேண்டும், ஆனால் வருத்தப்படுகிறேன் என்று தேவேந்திர ஃபட்னாவிஸின் பதவி விலகல் குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி ட்விட் செய்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் பதவியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் நேற்று பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியிலிருந்து தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலகுவதாக அறிவித்தார். மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக சிவசேனாவின் உத்தவ் தாக்ரே நாளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

என்ன செய்யுறது….. ”உலகம் முழுவதும் பரவுதே”….. கடுப்பில் பாஜக ….!!

தொடர்ந்து இழுப்பறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் முதல்வர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து முடிவுக்கு வந்தது. மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா முதல்வர் பதவியில் 2 1/2 ஆண்டுகள் பங்கீட்டுக்கொள்ள பாஜக ஒத்துக் கொள்ளாத நிலையில் கூட்டணி முறிந்து குடியரசு தலைவர் ஆட்சி அமுலாக்கியது. பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை பதவி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா: உறுதியானது ஆட்சி மாற்றம்…!!

மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 162 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரே இடத்தில் கூடி தங்களின் பலத்தை நேற்று காட்டினர். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். துணை முதலமைச்சர் அஜித் பவாரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதனை தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதிபடுத்தியுள்ளார். மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”எதிர் கட்சியை உடைக்க மாட்டோம்” எதிர் கட்சியாக இருப்போம் – தேவேந்திர ஃபாட்னாவிஸ்

தொடர்ந்து இழுப்பறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் முதல்வர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து முடிவுக்கு வந்தது. மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா முதல்வர் பதவியில் 2 1/2 ஆண்டுகள் பங்கீட்டுக்கொள்ள பாஜக ஒத்துக் கொள்ளாத நிலையில் கூட்டணி முறிந்து குடியரசு தலைவர் ஆட்சி அமுலாக்கியது. பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முடிவுக்கு வந்தது…… ”ஏமாந்து போன பாஜக”….. நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை ..!!

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா முதல்வர் பதவியில் 2 1/2 ஆண்டுகள் பங்கீட்டுக்கொள்ள பாஜக ஒத்துக் கொள்ளாத நிலையில் கூட்டணி முறிந்து குடியரசு தலைவர் ஆட்சி அமுலாக்கியது. பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றது பாஜக. இதில் முதல்வராக பாஜகவின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : முதல்வர் பதவியில் இருந்து பட்னாவிஸ் ராஜினாமா …!!

மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா_வில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளின் இடையே இருந்த முதல்வர் பதவி பகிர்வில் பாஜக உடன்படாததால் யாரும் ஆட்சி அமைக்க முன்வர வில்லை. இதை தொடர்ந்து பாஜக – சிவசேனா கூட்டணி முறிந்தது.அதே நேரத்தில் சிவசேனா , காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வந்தன.ஆனால் கடந்த சனிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ் ராஜினாமா?

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா_வில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளின் இடையே இருந்த முதல்வர் பதவி பகிர்வில் பாஜக உடன்படாததால் யாரும் ஆட்சி அமைக்க முன்வர வில்லை. இதை தொடர்ந்து பாஜக – சிவசேனா கூட்டணி முறிந்தது.அதே நேரத்தில் சிவசேனா , காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வந்தன. இதை தொடர்ந்து கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு: தப்பிக்குமா ஃபட்னாவிஸ் அரசு?

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்ற நிலையில், பாஜக ஆட்சி அமைத்த விதம் சட்டவிரோதமானது எனக் கூறி விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. இவ்வழக்கில் சிவசேனா சார்பாக கபில் சிபல், மத்திய அரசு சார்பாக அரசு துணை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING : பாஜகவுக்கு செக்…. ஓடவும் முடியாது , ஒழியவும் முடியாது …!!

மஹாராஷ்டிரா அரசியல் உருவாக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்கள்:  இடைக்கால சபாநாயகர் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் மறைமுக வாக்கெடுப்பு நடத்த கூடாது நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலை செய்யப்பட வேண்டும் மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும் சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூட்டப்பட வேண்டும் உறுப்பினர்கள் பதவியேற்பு நடத்த வேண்டும் .

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமையும்’ – சஞ்சய் ராவத்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி அரசு டிசம்பர் 1ஆம் தேதிக்குள் அமையும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டியளித்த அவர், ‘காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஆட்சியமைக்கும் அரசின் அதிகாரப் பகிர்வு குறித்து மூன்று கட்சிகளும் கூட்டாக முடிவு செய்யும். நேற்றுவரை, காங்கிரஸ்-என்சிபியின் மராத்தான் கூட்டங்கள் என்சிபி தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நடைபெற்றது. அடுத்த இரண்டு நாட்களில் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்… மோடியை சந்திக்கிறார் சரத்பவார்

பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று சந்திக்க இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது. இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் சிவசேனா இறங்கியது. ஆனால் சிவசேனாவுக்கு இரண்டு கட்சிகளும் தங்களது ஆதரவை கொடுப்பதில் யோசனை காட்டிவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாடாளுமன்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிவசேனாவுக்கு சோனியா எதிர்ப்பா? – பதிலளிக்கிறார் சரத் பவார்…!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது. சந்திப்புக்குப்பின் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பதிலளித்தார். சிவசேனாவுடனான கூட்டணிக்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்தாரா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தை தீர்ப்பாரா மத்திய அமைச்சர்?

முதலமைச்சர் பதவியை இரண்டு ஆண்டுகளுக்கு சிவசேனாவுக்கு அளிப்பது குறித்து இரு கட்சிகளிடம் பேசிவருவதாக மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனிடையே, மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சர் ராவத்திடம் சமரசம் குறித்து பேசி வருகிறேன். முதலமைச்சர் பதவியை மூன்று ஆண்டுகள் பாஜகவுக்கும் இரண்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: மகாராஷ்டிரா : 3 கட்சியினர் நாளை ஆளுனருடன் சந்திப்பு …..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா ,காங்கிரஸ் , சிவசேனா தேசியவாத காங்கிரஸ் நாளை ஆளுநரிடம் சந்திக்கிறார்கள். மகராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள். மூன்று பேருக்குமே ஒத்துக் கொள்ளக்கூடிய விஷயங்களைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டணி அமைக்கலாம் என்றும் , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சரத் வாங்க…. பாஜகவும் வேண்டாம்….. சேனாவும் வேண்டாம்…. ஆளுநர் அழைப்பு ..!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கக் கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை மறுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தன்னால் ஆட்சியமைக்க இயலாது என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்புவிடுத்தார்.அந்த அழைப்பை ஏற்று ஆளுநரை சந்தித்த சிவசேனா, காங்கிரஸிடம் இருந்து உறுதியான நிலைப்பாடு தெரிவிக்காத நிலையில் ஆளுநரிடம் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”மத்திய அமைச்சர் வேண்டாம்” பதவியை தூக்கி எறிந்த சிவசேனா …..!!

பாஜகவுடனான கூட்டணி முறிவைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா விலகியுள்ளது. இதனால் அக்கட்சி தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 21ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தன.ராஜ்தாக்கரே கட்சியான நவநிர்மாண் சேனா ஒரு இடத்தில் வெற்றிபெற்று தனது கணக்கைத் தொடங்கியது. சமாஜ்வாதி, பிரகார் ஜனசக்தி, ஓவைசியின் அகில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நீங்க தான் முதல்வர்….. 2 நாளில் நிருபியுங்கள்….. பட்னாவிஸ்_க்கு ஆளுநர் செக் ..!!

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிவசேனா – பாஜக இடையே ஆட்சிப் பகிர்வில் கடும் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், தற்போது முதலமைச்சராக பதவி ஏற்க வருமாறு தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், வருகின்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அமித்ஷா எதுக்கு ? தேவை இல்லை -பாஜகவை கதறவிட்ட சிவசேனா …!!

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தயவு தேவை இல்லை என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் மகாராஷ்டிராவில் சிவசேனா கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்றும் , ஆட்சியை கைப்பற்ற தங்களுக்கு அமித்ஷா  மற்றும் பட்னாவிஸ் அடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். தாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்ததாகவும் , பாஜக பொய் உரைத்ததால் தாங்கள் அவர்களுடன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வர் பதவி… ”அப்பாக்கு வாக்கு கொடுத்துட்டேன்” அசைந்து கொடுக்காத உத்தவ்

முதலமைச்சர் பதவி குறித்து அமித்ஷாவிடம் முன்கூட்டியே பேசியதாகவும், தாக்கரே குடும்பத்தினர் ஒருவரை முதல்வராக்குவேன் என தனது தந்தை பால்தாக்கரேக்கு வாக்கு கொடுத்துள்ளதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவிக்கான போட்டா போட்டி காரணமாக இருகட்சிகளும் முரண்டு பிடித்துவருவதால் முடிவுகள் வெளிவந்த 15 நாட்கள் கழித்தும் ஆட்சி அமையவில்லை. சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

‘பால் தாக்கரே இருந்தால் தைரியம் வருமா?’ பாஜகவுக்கு ரோஹித் பவார் கேள்வி…!!

பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால், பாரதிய ஜனதாவுக்கு இத்தனை தைரியம் வருமா? என்று தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் ராஜேந்திர பவார் கேள்வி எழுப்பியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிரா மாநிலத்தின் கார்ஜட் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரோஹித் ராஜேந்திர பவார் முகநூலில் பாஜகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பல தலைவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி மகாராஷ்டிரா. அப்படிப்பட்ட ஒரு தலைவர் தான் பால […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டும் பாஜக…..!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளான பாஜக, சிவசேனா கட்சிகளுக்கிடையே மாற்றுக் கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் பாஜக வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் சிக்கல்: ஆளுநரை சந்தித்தார் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்துவரும் பரபரப்பான சூழலில், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்துப் பேசியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 162 இடங்களை கைப்பற்றியுள்ளது. 104 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பாஜக-வுக்குக் கிடைக்கவில்லை. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிவசேனா, வெறும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டிய மண்ணில் அமைச்சராகும் தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன்?

மகராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மகத்தான வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் பாஜக 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், மும்பையின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான சியோன் கோலிவாடாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் இரண்டாவது முறையாக வெற்றி வாகைச் சூடியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் மகன் வெற்றி……. “2 வது இடம்” பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளிய நோட்டா….!!

மஹாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் போட்டியிட்ட அதே தொகுதியில் அவரது இளைய மகன் வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணியை நோட்டா   பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் எஸ்சி எஸ்டி வாக்குகள்  அதிகம் உள்ள லத்தூர் தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் மரணமடைந்த நிலையில், அவரது இளைய மகன் தீரஷ் தேஷ்முக்  அதே தந்தை நின்ற அதே தொகுதியில் நின்று 67.63 வாக்கு சதவிகிதமும் மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மிக மோசம் …. வெறும் 5.46 % , வெறும் 8.76 % ….. 10 மணி நிலவரம் …!!

7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் ஹரியானா , மகாராஷ்டிரா வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகியுள்ளது. 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மஹாராஷ்டிரா மற்றும்  90 சட்டமன்ற தொகுதிகளை  ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகின்றது. காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அங்கங்கே வாக்குபதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டும் அது சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. மகாராஷ்டிரா_வை பொறுத்தவரை போதிய தேர்தல் விழிப்புணர்வு இல்லாமைலும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேர்தலுனு தெரில….. கடுமையான குளிர் ….. மந்தமான வாக்குப்பதிவு …!!

ஹரியானா மாநிலத்தில் 9.30 மணி வரை மிகவும் மந்தமான நிலையிலே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . ஆங்காங்கே சில வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

எப்படி வாக்களிக்க ? ”இயந்திரம் வேலை செய்யல” பொதுமக்கள் புகார்

மகாராஷ்டிரா , ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வழக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.  மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . ஆங்காங்கே சில வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”எல்லோரும் , இளைஞர்கள் வாக்களியுங்கள்” – பிரதமர் மோடி ட்வீட்

இரண்டு மாநில சட்டப்பேரவை மற்றும் பல்வேறு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி , எல்லோரும், முக்கியமாக இளைஞர்கள் அதிகமாக வாக்களித்து இந் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு மட்டுமா …? இல்ல… இல்ல நாங்களும் கொடுப்போம் …..!!

தேர்தலை முன்னிட்டு மகாராஷ்டிராவில் ரூ. 142 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் அங்கு தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது.தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை மொத்தம் ரூ. 142 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 975 சட்டவிரோதமான ஆயுதங்களையும் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே வாக்குக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மும்பை தாக்குதலுக்கு பிறகும் காங்கிரஸ் செயல்படவில்லை – மோடி

மும்பை தாக்குதலில் காரணமானவர்கள் குறித்து விசாரணைக்கு பின்பும் கூட காங்கிரஸ் அரசு உரிய முறையில் செயல்படவில்லை என்று நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார். மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணாமக பாஜக, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன் தனது கடைசி பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மும்பையில் நடைபெற்ற பயங்வாதிகள் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”மகாராஷ்டிராவில் 24ஆம் தேதி தீபாவளி” உள்துறை அமைச்சர் அமித் ஷா …!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ, வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் நீக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வானி பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவினார்கள். நமது வீரா்களின் தலை துண்டிக்கப்பட்டது. இந்திய எல்லையில் ஊடுறுவல் என்பது சர்வசாதாரணமாக நடந்தது.காங்கிரஸ் என்ன செய்தது? ஆனால் பாரதிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பாஜகவுக்கு வாக்களியுங்கள்” வாக்குச் சேகரிப்பில் யோகா குரு…..!!

மஹாராஷ்டிரா, ஹரியானா தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்கும் படி யோக குரு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார். பதஞ்சலி நிறுவனரும், யோக குருவுமான பாபா ராம்தேவ், ஹரியானா மாநிலம் குருகுராமில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான பாஜகவால் தான் மத்தியிலும், மாநிலங்களிலும் நிலையான ஆட்சியைத் தர முடியும். ஒரு நிலையான ஆட்சியே, மக்கள் ஆட்சியாகப் பார்க்கப்படும். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை …!!

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தலன்று காலை 7 மணி முதல் மாலை 6.30 வரை கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வருகிற 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதுமட்டுமின்றி 17 மாநிலங்களில் காலியாகவுள்ள 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.இதையடுத்து அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6.30 வரை (அதாவது வாக்குப்பதிவு நிறைவடையும் வரை) எவ்வித கருத்துக் கணிப்புகளும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் […]

Categories
மாநில செய்திகள்

உதித் சூர்யாவை CBCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர்…..!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_வை BCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து  தேனி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தார்கள். தண்டையார்பேட்டையில் இருந்து வந்த உதித் சூர்யா , அவரின் தந்தை வெங்கடேசன் , தாய் என குடும்பத்தோடு தலைமறைவானார்கள். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உதித் சூர்யா_விடம் CBCID போலீசார் விசாரணை……!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_விடம் CBCID போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து  தேனி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தார்கள். தண்டையார்பேட்டையில் இருந்து வந்த உதித் சூர்யா , அவரின் தந்தை வெங்கடேசன் , தாய் என குடும்பத்தோடு தலைமறைவானார்கள். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீட் ஆள்மாறாட்டம் : ”உதித் சூர்யா குடும்பத்துடன் கைது” CBCID அதிரடி ….!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்து விட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீட் ஆள்மாறாட்டம் : ”உதித் சூர்யா குடும்பத்துடன் கைது” CBCID அதிரடி ….!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்து விட்டு […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : CBCID போலீஸ் வசம் ஒப்படைப்பு…..!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனி மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா என்ற மாணவன் படித்து வந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் , உதித் சூர்யா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். மாணவன் உதித் சூர்யா தலைமறைவாகி இருக்கும் சூழலில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தில் என்பதால் இந்த விசாரணையை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென்று தமிழக அரசு இந்த வழக்கை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டியத்தில் வெல்வது யார்? முடிவாகாத பாஜக கூட்டணி….!!

மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி இன்னும் கூட்டணி அமையாததால் யார் வெற்றி பெறுவார் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மராத்திய மாநிலத்தில் அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அது மத்தியிலும் எதிரொலிக்கும் என்பதால் மராட்டிய தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் , பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா ஆகிய நான்கு கட்சிகள் முக்கியமானவை. 288 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Breaking : தமிழகம் , மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா  மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் ஆயுள் காலம் நவம்பர் 9 _ஆம் தேதியும் ,  ஹரியானா மாநில சட்டசபையின் ஆயுள்காலம் நவம்பர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த மாநில சட்டசபை தேர்தல் குறித்த தேதியை வெளியிட டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 288 தொகுதிகளைக் கொண்ட மராத்திய சட்டப்பேரவையில் 8.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி […]

Categories
மாநில செய்திகள்

நீட் ஆள்மாறாட்டம் :மாணவனின் தந்தை எங்கே ? தனிப்படை விசாரணை…!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தனிப்படை போலீஸார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி […]

Categories
மாநில செய்திகள்

நீட் ஆள்மாறாட்டம் : சிக்குவாரா உதித் ? தனிப்படை தேடுதல் வேட்டை….!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தனிப்படை போலீஸார் மாணவன்   உதித்சூர்யா தேடி வருகின்றனர். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்ததாக தெரிகின்றது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

நீட் ஆள்மாறாட்டம் : 3 பிரிவுகளில் வழக்கு…. 7 பேர் கொண்ட தனிப்படை..!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் 2 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 13_ஆம் தேதி அசோக் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகார் அளித்தன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன்  உதய் சூர்யா மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று , தேனி மருத்துவ கல்லூரியில் படித்து  வந்த நிலையில் அவரின் ஹால் டிக்கெட் மற்றும் கல்லூரி அட்மிஷன் புகைப்படம் சர்சைக்குள்ளாக்கியது. […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் ஆள் மாறாட்டம் : 2 பேர் மீது வழக்கு பதிவு,கைது நடவடிக்கை… தேனி SP தகவல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் புகாரில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்று தேனி மாவட்ட SP தெரிவித்துள்ளார். கடந்த 13_ஆம் தேதி அசோக் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகார் அளித்தன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று , தேனி மருத்துவ கல்லூரியில் படித்த உதய் சூர்யா_வில் புகைப்படம் சர்சைக்குள்ளாக்கியது. மேலும் இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தேர்வு எழுதியவர் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

நீட் ஆள்மாறாட்டம்- மருத்துவ கல்லூரி இயக்குனர் பரபரப்பு பேட்டி…!!

சென்னையை சேர்ந்த உதய் சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மருத்துவக்கல்லூரி இயக்கம் சார்பில் மருத்துவ கல்லூரி இயக்குனர் நாராயண பாபு  செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் , கடந்த 13_ஆம் தேதி அசோக் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. அதில் நீட் தேர்வை எழுதியவர் புகைப்படமும் , கல்லூரியில் சேர்ந்தவரின் புகைப்படமும் மாறுபட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் இதை விசாரிக்க 4 பேர் கொண்ட  உயர்மட்ட குழு விசாரித்து வந்தது.  இதன் அறிக்கையை மாநில […]

Categories

Tech |