மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனது குற்ற வழக்குகளை மறைத்ததற்காக நாக்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்தார் காவல் நிலையத்தில் இருந்து முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இல்லத்திற்குச் சம்மன் கடிதம் கொண்டு சேர்க்கப்பட்டது. அதில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர், தன் மீதுள்ள இரண்டு குற்ற வழக்குகளை மறைத்து, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியான ‘மகா […]
