மும்பையில் சிகரெட் திருடிய வழக்கில் கைதான ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், நீதிபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை பங்கூர் பகுதியில் ஏப்ரல் 21ஆம் தேதி பூட்டப்பட்டிருந்த ஒரு கடையை உடைத்து சிகரெட் […]
