காஷ்மீரில் உள்ள எல்லை பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த, மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் அருகில் உள்ள சியாச்சின் பனிமலை பிரதேசத்தில் மைனஸ் 45 டிகிரி வரை குளிர் நிலவி வருவது வழக்கம், சியாச்சின் பனிக்கட்டிகள் நேரடியாக உடலின் மீது பட்டால், அந்த பகுதி கடும் குளிரில் உறைந்து ஒட்டிக்கொள்ளும் 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில், உறைந்து போகும் குளிரிலும், தாய் நாட்டுக்காக ராணுவவீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். […]
