ராமநாதபுரம் பரமக்குடி அருகே கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த உஸ்மான் என்பவர் தனது 2 மகள்களுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து, புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரம் நான்கு வழி சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பைக் ஒன்று திடீரென குறுக்கிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் உடனே பிரேக் பிடிக்க முடியாமல் பைக் மீது மோதிய அந்த கார், சாலை நடுவில் இருந்த தடுப்பு […]
