விபத்தில் சேதமடைந்த காருக்கு இன்சூரன்ஸ் தொகையை தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அம்பட்டையன்பட்டி கிராமத்தில் தங்கராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கராமனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் தனது உறவினர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கியதால் தங்கராமனும், அவரது உறவினர்களும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் […]
